
எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், பழம் கலவை கொண்டாட்டம் நடந்தது. எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இயக்குநர் டி.ஆண்டனி அசோக்குமார் தொடக்க உரையுடன், ஜிஆர்டி ஹோட்டல்களின் கார்ப்பரேட் செப் ஹீத்தாராம் பிரசாத் சிறப்புரை ஆற்றினார். பழம் கலவையின் பாரம்பரிய விழா, பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்குகள் மற்றும் இனிப்புகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான கலவையை உருவாக்க பல்வேறு வகையான பழங்கள், கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்களை மதுவில் ஊறவைக்கும் வழக்கம் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த 20 புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள், டாக்டர். டி.ஆண்டனி அசோக் குமார், எஸ்.ஆர்.எம் ஜஎச்எம் இயக்குநர், திருமதி ஜே.லலிதா ஸ்ரீ, எஸ்ஆர்எம் ஜஹெச்எம் துணை முதல்வர், எஸ்ஆர்எம் ஐஎச்எம் சமையல் கலைஞர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.