கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை-தாம்பரம் / செங்கல்பட்டு ரயில் மார்க்கம், ஒவ்வொரு நாளும் சென்னையின் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்த இரு ரயில் நிலையங்களிலும் புத்தாக்க பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

A. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கிண்டி ரயில் நிலையத்தின் புத்தாக்க திட்ட பணிகள்.

கிண்டி ரயில் நிலையம், தினசரி சுமார் 60,000 பயணிகள் வந்து செல்லும் ஒரு முக்கியமான ரயில் நிலையம்.
இதன் அருகில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி மற்றும் பல பொறியியல், கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளன. மேலும், கிண்டி குதிரை பந்தய கிளப், கிண்டி தேசிய பூங்கா மற்றும் பிரபல பீனிக்ஸ் வணிக வளாகமும் அருகாமையில் உள்ளது.
இந்திய ரயில்வேயின் முன்னோடி திட்டமான அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடி செலவில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கீழ்கண்டவாறு புத்தாக்கம் செய்யப்பட உள்ளது
• ஜி. எஸ்.டி சாலையில், நேர்த்தியான தோற்றத்துடன் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு அலுவலகம்.
• ஜிஎஸ்டி சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை பக்கங்களில் பயணிகள் உலவும் இடங்களை / வாகனங்கள் வந்து செல்லும் வழிகளை மேம்படுத்துதல்,
• இரண்டு நுழைவாயில்களிலும் பொது கழிப்பறைகள்,
• அனைத்து நடைமேடைகளின் தரை, கூரைகள் சீரமைப்பு,
• இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடுதல் வசதிகள்,
• நடைமேடைகளிலும், மக்கள் கூடும் தளத்திலும் பயணிகளுக்கு தகவல் தரும் திரைகளை நிறுவுதல்,
• சிசிடிவி வசதி,
• நடை மேம்பாலத்தை பயணிகள் பயன்படுத்த வசதியாக 3 மின்தூக்கிகள் அமைத்தல்.

B.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பரங்கிமலை ரயில் நிலையத்தின் புத்தாக்க திட்ட பணிகள்.

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின் கட்டம்-2 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், பரங்கிமலை ரயில் நிலையம் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் , மாநகர பேருந்து நிறுவனங்கள், இவற்றிற்கிடையே முக்கிய போக்குவரத்து மையமாக திகழவுள்ளது.

தினசரி 30,000-க்கும் அதிகமானோர் வந்து செல்லும் ஆன்மீக, வரலாற்று, வணிக முக்கியத்துவத்தை கொண்டுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.14.15 கோடி செலவில் கீழ்கண்டவாறு புத்தாக்கம் செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

• புதிய 2 ரயில் டிக்கெட் முன்பதிவு அலுவலகங்கள்,
• பயணிகள் உலவும் பகுதி மேம்பாடு,
• அனைத்து நடைமேடைகளின் தரை, கூரைகள் சீரமைப்பு,
• நடைமேடை எண் 1A-வில் கூடுதல் கூரைகள்,
• ரயில் நிலையத்தின் இருபுறமும் அமைந்துள்ள இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளின் அபிவிருத்தி, புதிய நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் மற்றும் பயணிகளுக்கான பாதசாரி பாதைகள்,
• புதிய ரயில் டிக்கெட் வழங்கும் அலுவலக வளாகம்,
• மெட்ரோ ரயில் பக்கத்திலிருந்து புதிய இரண்டாவது நுழைவாயில்,
• நடைமேடைகளிலும், மக்கள் கூடும் தளத்திலும் பயணிகளுக்கு தகவல் தரும் திரைகளை நிறுவுதல்,
• சிசிடிவி வசதி,

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம், ரயில் பயணிகளுக்கு விரும்பத்தக்க பயண அனுபவத்தை வழங்குவதோடு, ரயில் நிலையங்களின் சிறந்த உள்கட்டமைப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு இணையான வசதிகளை அளிக்கும்.