நாடு முழுவதும் அதிகரித்திருக்கும் ஃப்ளூ வகை காய்ச்சல், கொரோனா தொற்று போன்றவற்றை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில், அனைத்து மாநிலங்களும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநில அரசுகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பதற்றப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.