
கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு.
சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள்.
அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய அரசு தங்களின் வளர்ச்சியான 6 சதவிகிததிற்கு இனையாக கல்விக்கு நிதி ஒடுக்கீடு செய்திட வேண்டும் ஆனால் 3 சதவிகிதமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கல்விக்கு அதிக நிதி செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை புரிந்து மாணவர்களும் முழு அளவில் புரிதலுடன் படித்திட வேண்டும் அப்படி படிக்கும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல நிலையில் பணியாற்றிட முடியும் என்றார்.
அதுபோல் முன்னாள் தலைமை செயலாளர் இரையன்பு பேசும்போது மாணவர்கள் காலை நற்சிந்தனைகளுடன் நாளை துவங்கி உடற்பயிற்சியுடன் சத்தான உணவு, காலை உணவு தவிர்காமல் உண்டு முழு நாளையும் வசப்படுத்தவேண்டும் என்றார்.