
குரோம்பேட்டை பத்மநாபா நகர் ஸ்ரீ கருமாரியம்மன் பக்தஜன சபை சார்பில் ஐயப்ப சாமி 50ம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனுக்கு 51 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. குரோம்பேட்டை பிரபல கட்டுமான நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கர் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் கே.எச்.சங்கரநாராயணன் துணைவியார் திருமதி நித்யா சங்கர நாராயணன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். அருகில் சி.ஆர்.மதுரை வீரன், சந்திரசேகர் உள்ளனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்.