சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவன கல்லூரியில் கலை கலாச்சார விழா நடைபெற்றது.

இதற்காக அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் மூடிய கண்கள் மீது மண்ணை வைத்து கருப்பு துணியால் கட்டிய நிலையில் எதிராக இருநபர்களிடம் கத்தி கேடாயத்துடன் சண்டையிட்ட களரிப்பையட்டு இளைஞர் அசத்தினார்.

அதுபோல் பெண்கள் பல்வேறு சகசங்களை செய்த நிலையில் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக சண்டையிட்டதும் மாணவர்களிடம் வரவேற்பை பெற்றது.

கல்லூரியின் இயக்குனர் முனைவர் கார்திகேயன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.