
ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் ரூ.100 கோடி செலவிட அனுமதி உண்டு.
தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் போக மீதமுள்ள தொகையை ஏலத்தில் பயன்படுத்தலாம்.
வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 38. 15 கோடி உள்ளது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணி கையிருப்பில் ரூ.13.15 கோடி உள்ளது.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவிட உள்ள கையிருப்பு தொகை விவரம் பின்வருமாறு;-
1.சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ. 31.4 கோடி
- டெல்லி கேப்பிட்டல்ஸ் – ரூ. 28.95 கோடி
- குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 38.15 கோடி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ. 32.7 கோடி
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ரூ. 13.15 கோடி
- மும்பை இந்தியன்ஸ் – ரூ. 17.75 கோடி
- பஞ்சாப் கிங்ஸ் – ரூ. 29.1 கோடி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ. 23.25 கோடி
- ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.14.5 கோடி
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ. 34 கோடி.