
2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயிலுள்ள கோகோ- கோலா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
ஐ. பி. எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை ஒரு பெண் நடத்தவிருக்கிறார். இம்மாதிரியான ஏலத்தின் பொழுது Auctioneer அதாவது ஏலதாரரின் பங்கு மிகவும் முக்கியமானது.
2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் ஏலத்தை நடத்தி வந்தார்.
இம்முறை ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் (வயது 48) நடத்தவுள்ளார் என்று அறிவித்திருக்கின்றனர். இவர் 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதிகமாக கலைப் பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியிருக்கிறார். அதில் கொண்டிருக்கும் நீண்ட அனுபவத்தை வைத்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலதாரராக மாறினார்.