காஞ்சிபுரம் மாவட்டத்தலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வோர் மறவாமல் திருநீர்மலை சாலை முடிவில் உள்ள ஐஸ்வர்யம் தரும் சிவபுண்ணிய பூமிக்குச் சென்று வர வேண்டும்.
பழமையின் சின்னமாக விளங்கும் சிவத்தலம் உள்ள இடம் பழந்தண்டலம் என அழைக்கப்படுகிறது.
இந்திரனின் படைக்கலன்களில் ஒன்றான ஐராவத கஜம் பூஜை செய்து வரம் பெற்ற ஐஸ்வர்ய சிவன் இங்கே ஐராவதீஸ்வரராய் காட்சி தருகிறார்.
ஒரு வீட்டில் எண்வகை மங்கலப் பொருட்களில் ஒன்றான கஜம் என்ற யானை ஐஸ்வர்யமே வணங்கி கரும்பு தின்றதாலும், வணங்குவோர்க்கு மகிழ்ச்சியைத் அள்ளித்தரும் மகாலட்சுமியாக அழைத்து அருளும் அபய வரத முத்திரையுடன் அம்பிகை ஆனந்தவல்லி எனும் பெயரில் காட்சி தருவதும்,நவக்கிரஹ மேடையில் தல ரட்சகர் தென்முகம் நோக்கி நிற்பதும்,யானை முதுகு வகை கஜப்ருஷ்ட விமானம் இறைவன் கருவறைக்கு நிழல் தந்து நிற்பதாலும், திருச்சுற்றில் மலர் தரும் விருட்சங்ளோடு நான்கு வேதங்களே வில்வ மரங்களாய் நிற்பதும் சிறப்பு.
ஊரின் தென் பாகத்தில் நல்லதே நடக்க வைக்கும் நல்லாங்கன்னி திருக்குளத்தை யும் காண்பது நலம் கூட்டும்.
திங்கள், வெள்ளி அமாவாசை காலங்களில் நெய் தீபமிட்டு வில்வ தளங்களால் அர்ச்சித்து சிவபுராணம், நமச்சிவாய பதிகம் ஓதிட ஐஸ்வர்ய சிவனருளால் தனவளம் சேரும் என்பது நம்பிக்கை.புனித தீர்த்தங்களை வணங்கும் ஐப்பசி தீபாவளி கங்காஸ்நானம் கார்த்திகை சோமவாரம் மார்கழி மாதங்களில் சென்று வருவது உகந்தது.நீங்களும் ஒருமுறை சென்று வரலாமே….
செய்தி:-கே.குமார சிவாச்சாரியார்.