
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் எஸ்.ஆர்.எம் சர்வதேச உறவுகளுக்கான இயக்குநரகம், தைவான் வெளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சில், இணைந்து தைவான் நாட்டில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தைபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநர் ஜெனரல் ரிச்சார்ட் சென், பொருளாதார விவகார அமைச்சின் நிர்வாக அதிகாரி பெய்சி லாய், தாய்ரா’ இன் மேலாளர் ஜீனாயே, தைபே உலக வர்த்தக மையத்தின் இயக்குநர் ஜீல்ஸ் ஷிஹ், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் சர்வதேச உறவுகளின் இயக்குநர் லட்சுமி நரசிம்மன், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் தொழில் மையத்தின் துணை சுரேஷ் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த நிர்வாகிகளும், பொறியியல் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.