சென்னை சூளை, தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தேர்தலின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரசுராமன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாக்காளர்களை ஏமாற்றியதை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது.
வீட்டு உரிமையாளர்களை கருத்து கேட்ட பின்பு போராட்டம் தேதி அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது என கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் ஒருவரான ஆர்.டி.பிரபு மற்றும் முனியாண்டி, பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.