
ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பிநட்டா
ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
ஒடிசாவில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டுக்கட்டாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, 300 கோடி ரூபாய் இதுவரை எண்ணப்பட்டுள்ளது. பணத்தை விரைவாக எண்ணி முடிக்க, 40 இயந்திரங்களும், 70க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பார்லிமென்டில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் நட்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பா.ஜ., எப்போதும் கூறி வருகிறது. காங்., எம்.பி தீரஜ் சாஹு வீட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணம் யாருக்குச் சொந்தமானது?. இதற்கு சோனியாவும், ராகுலும் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.