பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார்.

பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார்.

இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார்.

இவரின் இரண்டாவது மகன் சித்தா.

இந்த நிலையில் ஏமசந்திரன் ஜெர்மனியில் வேலை தேடி வந்த நிலையில் உடல் எடை குறைத்துவிட்டு செல்லளாம் என அதற்கான மருத்துவரை தேடியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ மனையில் கடந்த ஆண்டு அங்குள்ள மருத்துவர் பெருங்கோ என்பவரிடம் ஆலோசனை பெற்ற நிலையில் சர்கரை நோய் அறிகுறியும் இருந்ததால் அதனை குறைத்துவிட்டு செய்யலாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்த நிலையில் குடும்பத்தினர் முடிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பெருங்கோவை சந்தித்தபோது சுமார் 7 லட்சம் முதல் 8 லடச்ம் வரை செலவாகலாம் என டாக்டர் தரப்பில் கூறியுள்ளனர்.

இதனால் குறைவான செலவில் அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தினர் கேட்டு கொண்ட நிலையில் என் உதவியாளர் தொடர்பு கொள்வார் என கூறியதால் ரேலா மருத்துவமனை விட்டு வெளியே வரும்போதே மற்றொரு செல்போன் என்னில் இருந்து அழைத்த நபர் இதே டாக்டர் பம்மல் டி.பி ஜெயின் மருத்துவமனையில் முன்றரை லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்வார் என கூறியுள்ளனர்.

மேலும் பல்வேறு யூடியூப் விடியோகளை காட்டி ஏமசமதிரனை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி ஓப்புதல் பெற்றுள்ளனர்.

ஆனால் மீண்டும் ரேலா மருத்துவமனையிலேயே பல்வேறு சோதனைகளை செய்துள்ளனர். அதில் மயக்க மருந்து டாக்டர் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மாதம் 21ம் தேதி பம்மல் டி.பி.ஜெயின் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு டாக்டர் அறுவைச்சிகிச்சை அரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது தான் மயக்கம் மருந்து கொடுக்கும் அந்த மருத்துவமனையை சேர்ந்த மற்றொரு மருத்துவர் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் 45 நிமிடத்தில் முகத்தில் பதட்டம் பரபரப்புடன் மருத்துவர் பெருன்ங்கோ வெளியே வந்து அறுவை சிகிசைக்கு ஏமசந்திரன் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என கூறி அவர ஊர்தியில் மீண்டும் ரேலா மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கும் முச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் ஒன்றரை நாள் இருந்த நிலையில் உயிர் பிரிந்தது.

இதனால் செல்வநாதன் உள்ளிட்ட குடும்பத்தினர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பிரேதத்தை பாண்டிச்சேரிக்கு கொண்டு சென்றனர்.

இதுபோல் சிறுக சிறுக உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் நிலையில் இளம் ஐ.டி பொறியாளர் அதீத எடை காரணமாக சிகிச்சைக்கு வந்தவரை எப்படியாவது தனக்கு பணம் கிடைத்தால் போதும் என முறையான வழிகாட்டுதல், வசதிகள் இல்லாத மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இளம் ஐ.டி பொறியாளர் உயிரிழந்தது குடும்பத்தினர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.