
பெருமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து சீராகி உள்ளது. அதேபோல தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஆனால் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு இதுவரை ரயில் போக்குவரத்து தொடங்கபடவில்லை. பஸ்கள் வேறு வழியாக சுற்றி நெல்லைக்கு செல்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் தனியாக அணியை சரியாக நியமிக்கப்பட்டு வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.