செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பல்லாவரம்‌ துரைப்பாக்கம்‌ ரேடியல்‌ சாலை பல்லாவரம்‌ பெரிய ஏரி அருகில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு வண்ண பலூன்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ ச.அருண்ராஜ்‌ அவர்கள்‌ வானில்‌ பறக்கவிட்டார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகும்னா அவர்கள்‌, காவல்துறை துணை ஆணையாளர்‌ அ.பவன்குமார்‌ அவர்கள்‌ உதவி ஆட்சியர்‌ (பயிற்சி) அனந்த்குமார்‌ சிங்‌ அவர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.