ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
▪️நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
▪️ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.
▪️ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
▪️அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
▪️மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்திற்கு சென்ற வண்டி மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.
▪️உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்பிஐ வங்கி; தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்.
▪️சிஏஏவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; தலைநகர் டெல்லி, அசாமில் தீவிரமடையும் போராட்டம் – பிரதமர் மோடி, அமித் ஷா உருவபொம்மை எரிப்பு