முன்பு இருந்தது போலவே 4.5% கொழுப்புச் சத்தும் மற்றும் 8.5% இதர சத்துக்களுடன் விற்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு.

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை திடீரென்று நிறுத்திவிட்டு ஊதா நிறத்தில் பால் பாக்கெட்டை ஆவின் அண்மையில் அறிமுகம் செய்தது.

இதில் கொழுப்புச் சத்தின் அளவும் 3.5% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் பச்சை நிற பாக்கெட்டின் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படி திமுக அரசு பாலில் கொழுப்புச் சத்தை குறைத்து வழக்கம்போல் விஞ்ஞான ரீதியான ஊழலில் ஈடுபட்டது.

இதையடுத்து, அமைச்சரைக் கண்டித்து #கொழுப்புத் திருடன் என சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் பகிரப்பட்டன.

இந்நிலையில், பழையபடி 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.