
ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் 200 கோடி மதிப்புள்ள 50 சென்ட் அரசு நிலம் மீட்பு, வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்த நபர்களின் பொருட்களை கைப்பற்றினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் லெதர் பொருட்கள் விற்பனை மைய்யம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட மூன்று இடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சிர் அறுமுகம் தலைமையில் பாதுகாப்புடன் பொருட்களை அகற்றிய வருவாய் துறையினர் 200 கோடி மதிப்புள்ள 50 சென்ட நிலத்தை மீட்டு அரசு கட்டுபாட்டில் உள்ள இடம் என விளம்பர பேனரை நிறுவினார்கள்.
இதனால் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை பகுதியில் பரபரப்பாக காட்சியளத்தது.