
சிவபெருமானை அடைய ஊசிமுனையில் அம்பாள் கடும் தவம் இருந்த நன்னாளே ஆடித்தபசு. தபசு என்றால் தவம், தபஸ் என்று பொருள்.
ஆடித்தபசு திருவிழா எல்லா சிவ தலங்களிலும் திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டாலும், ஆடித்தபசு என்றதும் நம் நினைவுக்கு வருவது சங்கரன்கோவில். இங்கு பல திருவிழா சிறப்பாக நடைபெற்றாலும், ஆடித்தபசு கோலாகலமாக நடைபெறும்.
ஊசிமுனை தவம் :
ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.
இந்த அற்புத நாளில் யாரெல்லாம் வழிபாடு, பிரார்த்தனை செய்கின்றனரோ அவருக்கு சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும்.