சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உயிர் கொடுத்த திருச்செங்கோடு நிறுவனம்!

உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே நவ. 12ல் மலையில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மறுமுனையில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை 11 நாட்களாக நடந்து வருகிறது. இவர்களை மீட்கும் பணிக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. இவர்களிடம் ‘சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் […]
சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றம்

உத்தரகாண்ட்: ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல்

உத்தரகாண்ட்: கட்டுமானத்தில் உள்ள சுரங்கத்தில் 6 நாளாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியின் போது, பெரிய அளவில் உடையும் ஒலி எழுந்ததால் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தம். NDRF உள்பட பல படைகளில் இருந்து 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ராமேசுவரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று […]
பணியாட்கள் இல்லாமல் திணறும் தாம்பரம் மாநகராட்சி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் நோய்கண்டறிதல் மைய்யத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள் கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மக்களின் அடிப்படை பணிகள் தடைபடுவதாகவும் அதனால் பணியாட்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுகொண்ட அமைச்சர் அதிகாரிகள் […]
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்

– மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு !
தமிழகத்தில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால்

அவர்களின் உடலை உடல் கூராய்வுக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்படும் செலவினம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை, அரசு அமரர் ஊர்தி அல்லது ரயில் மூலம் எடுத்துச் செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதெனில் அதிகபட்சமாக ஒரு […]