சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57% ஆகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல்நீரை […]

ஆலந்தூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயில் பொதுமக்கள் தாக்கத்தை போக்குவிதமாக ஆலந்தூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் திறந்துவைத்து, நீர்மோர் குளிர்பானம், குளிர்ச்சி தரும் பழங்களை வழங்கினார். சென்னை ஆலந்தூர் எம்.கே.என் ரோடு சத்திப்பில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஏற்பட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் பந்ததை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர், குளிர்பானம், தற்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் ஆகியவற்றை வழங்கினர். 12 […]

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

தென்னிந்தியாவில் உள்ள நீா்தேக்கங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீா் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மண்டலங்களில் நீா்தேக்கங்களில் உள்ள நீா் இருப்பு குறித்த விவரங்களை மத்திய நீா் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், மத்திய நீா் ஆணையத்தின் கண்காணிப்பில் 42 நீா்தேக்கங்கள் உள்ளன. அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டா்களாகும். […]

சிட்லபாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் […]

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தானியங்கி தண்ணீர் வழங்கும் மையங்களில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

இந்த தானியங்கி மையங்களில் 5 ரூபாய் நாணயம் செலுத்தி, தண்ணீரை பிடித்துச் செல்ல‌லாம். ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக காலை மற்றும் மாலையில் மட்டுமே தண்ணீர் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிட்ட உடன் அல்லது சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?

உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும். இதனால் தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் மேலும், சில உடல்நல சிக்கல் உண்டாகலாம். உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸின் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும். உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக […]

முடிச்சூர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்பு மோட்டார் சைக்கிள்கள் பாதிப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்து அடுத்து பழுதாகி வழியிலேயே நின்று போக காரணம் என்ன என பார்த்தபோது பெட்ரோலுடன் அதிக அளவு தண்ணீர் கலந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் […]

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டிசம்பர் இறுதி வரை தண்ணீர் திறக்க பரிந்துரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் பரிந்துரை

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஆணை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்.15 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட ஆணை!

சென்னை குடிநீர் ஏரிகளில் 63% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 63% நீர் இருப்பு உள்ளது 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 7.407 டிஎம்சி நீர் உள்ளது