தாம்பரத்தில் புதிய விளையாட்டு அரங்கம்

தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தாம்பரம் டிடிகே நகர்மைதானத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் , உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான பதிலில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்கு வட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் 10 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்கினார்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை முகாம் அலுவலகத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிட போக்ஸோ இணைய முகப்பு (POCSO PORTAL) குழந்தைகளுக்கான தனிநபர் பராமரிப்பு செயலி (INDIVIDUAL CARE PLAN APP) தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள வலை பயன்பாடு (WEB APPLICATION) குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கான ஆய்வு மற்றும் கண்காணிப்பு செயலியையும் (INSPECTION AND MONITORING APP FOR CHILD CARE INSTITUTIONS) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது சமூக […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்

இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (ஏ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ […]
சின்னவர் லண்டன் சென்றார்?

பாராளுமன்றத் தேர்தலில் 24 நாட்கள் பிரசாரம் செய்தசின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வுக்காக லண்டன் சென்றார். வரும் 10ம் தேதி சென்னை திரும்புகிறார்.
சனாதாரம் குறித்து சர்ச்சை கருத்து அமைச்சர் உதயநிதி மீது பீகாரில் வழக்கு பதிவு

சகானா குறித்து சர்ச்சையில்க்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி பீகாரில் இந்து மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதான தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் டெங்கு, கொசு, மலேரியா போன்றவை பற்றி தடுக்க கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதுபோலத்தான் சனாதான தர்மம் ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சையாக பேசினார். இது நாடு […]
சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை” -நீதிபதி அனிதா சுமந்த்

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்

ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர். வீராங்கனைகளுக்கு சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 3 சதவீதம் விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, […]
அகில இந்திய தீயணைப்புத்துறை சார்பில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 01.02.2024 முதல் 04.02.2024 வரை நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்ற வீரர்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி, குழு புகைப்படம் எடுத்து கொண்டார்

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், மற்றும் இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ₹1 கோடி நிதியுதவி வழங்கினார்