ஜன.7ல் பட்டதாரி ஆசிரியர் தேர்வு

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறுகிறது. www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.

பெருங்களத்தூரில் 162 மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள். அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார். […]

பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு – கால அவகாசம் நீடிப்பு!

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் உள்ளிட்ட 2,222 காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் போட்டித்தேர்வு வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், நவம்பர் […]

11ம் வகுப்பு பொது தேர்வு நடத்த முதுநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம், உண்ணா விரதம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டா.டொமினிக் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 1.6.2009 தேதிக்கு பின் சேர்ந்த பட்டதாரி ஆசிரியருக்கும் முன் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தற்போது 15 ஆயிரம் வரை ஊதிய விகிதம் காணப்படுகிறது. […]

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு – விண்ணப்பப்பதிவு தொடங்கியது

சென்னை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் […]

ஆசிரியர் ஊதிய முரண்பாடு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களில் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான பரிந்துரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணியில் மூத்தவரின் […]

அரசுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து டிட்டோஜாக் […]

சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர் லா உஷா பேச்சுவார்த்தை

ஏற்கனவே 3 சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு பகுதி நேர ஆசிரியர் சங்கமும் இணைந்தனர். நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு

காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]