தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]

குடியால் வந்த வினை தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் […]

தேசிய கிக் பாக்சிங் போட்டியில் 2 தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தொடர் சாதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜினியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் 27 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. […]

தாம்பரத்தில் பரபப்பு: பெண் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடியது

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற காவல்துறை வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு நல்வாய்பாக உயிர் தப்பித்து உள்ளோம் என புலம்பிய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜெயலட்சுமி இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு புறப்பட்டார். காரை […]

அப்துல் கலாம் நற்பணிமன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி காந்தி நகரில் அப்துல் கலாம் நற்பணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி 26 வது வார்டில் காந்தி நகர் A P J அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் குலசேகரன் ஏற்பாட்டில் 80 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,ஜாமெண்டரி பாக்ஸ், புத்தக பை போன்ற பொருட்கள் காந்திஜி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக 26 ஆவது வார்டு மதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர் […]

திமுகவில் இருந்து தாம்பரம் தொழிலதிபர் விலகல்

மூன்று ஆண்டுகாளமாக திமுகவில் எந்த வித பணியும் தனக்கு அளிக்கவில்லை என்று தாம்பரத்தில் திமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் அடிப்படை பதிவிகளில் இருந்து விலகினார் தாம்பரம் நாராயணன் தற்போது வரை எந்த கட்சியில் இணைவது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பேட்டி கிழக்கு தாம்பரம் பகுதி சேர்ந்தவர் நாராயணன் பிரபல தொழிலதிபரான இவர் பதினாறு ஆண்டுகள் ஜனதா தளம் கட்சியிலும் 20 ஆண்டுகாலம் காங்கிரஸில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பிரச்சார […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம்‌ ஜி.எஸ்‌.டி சாலை சரவணா வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு. சஅருண்ராஜ்‌,இ.க.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌/வணிகவளாக ஊழியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா,இ.க.ஆ.ப., […]

தாம்பரம் குப்பை கிடங்கில் திடீர் தீ

தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவி […]