43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சொந்த முயற்சியால் சாலை பள்ளங்கள் மூடப்பட்டது

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட ராகவேந்திரா சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளங்களை ஏற்கனவே வெட்மிக்ஸ் எனப்படும் கலவை கொண்டு நிரப்பியும் மேலும் அந்த வெட்மிக்ஸ் நகர்ந்ததால் மேலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களை சீரமைப்பதற்கு பேட்ச் ஒர்க் எனப்படும் முறையில் தார் சாலை மேலும் அமைப்பதற்கு எழுதிக் கொடுத்த நிலையில் தற்காலிகமாக மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சொந்த முயற்சியால் பள்ளங்கள் மூடப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் திடீர் பள்ளம்

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு முத்தமிழ் தெருவில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
புதிய தார் சாலைக்கு பூமி பூஜை

தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டுக்குட்பட்ட லட்சுமிபுரம் ராஜீவ் காந்தி தெருவில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். உடன் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]