மே 6ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்
டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்

குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. (ஜூலை 24) 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தகவலை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 27 – ஜூலை 5ம் தேதி வரை 10ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இளநிலை BE/B.Tech முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தேர்வு முடிவுகளை coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.