கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் தாம்பரம் போக்குவரத்து போலீசார் ஏற்பாட்டில் நீர் மோர், தண்ணீர் பந்தலை போக்குவரத்து உதவி ஆணையாளர் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார்
தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மேற்கு பகுதியில் திரு வி க நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் 107 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு திரு.R. செல்வராஜ் அஸ்தினாபுரம் பகுதி கழக துணை செயலாளர் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860ஆக அதிகரிப்பு : முதலில் 5240 காலியிடங்கள் இருந்தநிலையில், தற்போது புதிதாக 620 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ்சுக்காக அல்லல் பட்ட மக்கள்?
நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்தது. மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பாரிமுனைக்கு செல்ல 11G தடம் எண்ணுக்காக இரவு 8.25 மணி முதல் இரவு 9.25 மணி வரை ஒரு பஸ் கூட வரவில்லை. இதனால் பெண் பயணிகள் அவதிப்பட்டனர். அதேப்போல் சென்னையில் ஒரு சில இடங்களில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. அதேப்போல் மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள […]
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது

பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். […]
குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்தவகையில் 2023 ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.
தெருநாய்களின் தொல்லை : – பொதுமக்கள் அச்சம் :

செம்பாக்கம் திருமலை நகர் 17வது தெருவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி பயமுறுத்துகிறது. தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொண்டுள்ளனர்.