முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்!*

இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.

வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் வைஷாலியின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவைஎதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி. கூறி னார்.

பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மிகவும் மரியாதைக்குரிய,என் அன்பான பிரதமர் நரேந்திர மோடி ஜி,உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்

3 வருடத்திற்கு பிறகு மணிப்பூருக்கு செல்கிறார் மோடி*

2023ல் இனமோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக பிரதமர் மோடி செல்கிறார் *ரூ.8500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்

பிரதமர் பெருமிதம்

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை என்றும், பெரும்பாலான பொருட்கள் இனி மலிவான விலையில் கிடைக்கும் எனவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி

செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றிய மோடி

79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டிசெங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றினார் பிரதமர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் மோடி. காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர்.சுதந்திர தின உரையில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்

ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிய மோடி

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வைக்க சென்றார். அப்போது ராகி குண்டா ரயில் நிலையத்திற்கு சென்ற அவர் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினார்

இந்தியா மீது மேலும் தடை – டிரம்ப் அறிவிப்பு

நிருபர்கள் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீதும் வரி விதிக்கப்படலாம். இந்தியா மீது வரி விதித்து 8 மணி நேரம் தான்ஆகியுள்ளதுஇன்னும் பல 2ம் நிலை தடைகளை பார்க்க போகிறீர்கள் என பதில் அளித்தார். மேலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து செமி கன்டக்டர் சிப்கள் மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்காவில் தயாரிக்க முற்பட்டால் செமி கன்டக்டர் சிப்கள் மீது வரி எதுவும் இல்லை என்று […]

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் அன்றைய தினம் கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், அடுத்த நாள் திருவண்ணாமலைக்கும் செல்ல உள்ளார்.