மணிப்பூரில் வன்முறை இல்லா பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்க உத்தரவு

மே மாதம் முதல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மொபைல் இன்டர்நெட் சேவைக்கான தடை இன்றுடன் முடிவடைகிறது

செல்போன் விபரீதம் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் பலி

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சர்மா தெருவை சேர்ந்தவர் செந்தில் பிரசாத் (32),இவருடைய மனைவி ரன்ஜினி தேவி (30) இவருவரும் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலை ரன்ஜினி தேவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் பிரசாத் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்த ரன்ஜினி தேவி வீட்டிற்க்கு சென்று பார்த்த போது பால்கனியில் செந்தில் பிரசாத் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து […]

செல்போன் விபரீதம்: தந்தையின் ஆட்டோவில் இருந்து விழுந்த சிறுவன் பலி

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி இவர்களின் இரண்டரை வயது மகன் பிரதீப், நேற்று இரவு அருணாச்சலம் மது போதையில் ஆட்டோவில் தனது மகன் பிரதிப் உடன் மப்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மப்பேடு சந்திப்பில் ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடி கொண்டிருந்த பிரதீப் தீடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மினி வேன் […]

ஆயிரக்கணக்கில் செல்போன் இணைப்புகள் – தொலைத் தொடர்புத்துறை அதிரடி!

6 மாதங்களில் 64 லட்சம் இணைப்புகள் துண்டிப்பு! இந்தியாவில் மோசடியாக பெறப்பட்டிருந்த 64 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள், கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை தகவல்! ஆதார் அட்டையை வைத்து ஒருவர் 9 இணைப்புகள் மட்டுமே வாங்கமுடியும் என்ற நிலையில், சிலர் ஆயிரக்கணக்கான இணைப்புகளை வாங்கியிருந்ததால் ஒன்றிய அரசு நடவடிக்கை

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படும்.

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’

பேரிடர் கால அவசர தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ எனும் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டத்தை இன்று தமிழ்நாடு அரசு தொடங்குகிறது. இதன் மூலம் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைவருக்கு ஒரே நேரத்தில் பேரிடர் குறித்த எச்சரிக்கை அனுப்பப்படும்.

மக்களே பயப்பட வேண்டாம்..இன்று செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை

பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“ சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரிடர் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் எதிர்வரும் 20.10.2023 நடத்தப்பட உள்ளது. “செல் […]

பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக் கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம்.

செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை, கியூ பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை!

சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதாகவும், அவர் அளித்த தகவலின் பேரில் சென்னையில் மன்சூரின் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையின் போது தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும் […]