அரசு ஊழியர் போராட்டம் – அமைச்சர் பேச்சு வார்த்தை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.”
வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசளிக்கப்பட்டது.
இலங்கைக்கு கப்பலில் நிவாரணப் பொருள்கள்! கொடியசைத்து அனுப்பி வைத்த மு.க. ஸ்டாலின்!!
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது!
நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை’ மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
SIR என்றாலே திமுக அலறுது, பதறுது – எடப்பாடி பழனிசாமி.
முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவிடுத்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என S.I.R. வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது “ கால அவகாசம் போதாது என திமுக சொல்கிறது; 8 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் இந்த படிவத்தை கொடுத்துவிடலாம் […]
கமல் பிறந்தநாள் வீட்டுக்கு சென்று ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா மகன் உதயநிதி மருமகள் சபரீசன்உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேரில் சென்று கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார் அப்போது சாருஹாசன் உடல் நிலையையும் கேட்டு அறிந்தார் .இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா – பிகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் […]
சிலம்பம் சுற்றிய மு.க.ஸ்டாலின்
தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்துக்கு சென்றார். அங்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி பிரேமாவுக்கு கொடுத்தவாக்குறுதியின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாணவியின் குடும்பத்துக்கு வீடுகட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது மாணவி பிரேமாவின் தாயார் ரா.முத்துலட்சுமி,தந்தை சு.ராமசாமி ஆகியோரிடம் பேசினார். மேலும் […]
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார்
தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.