சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சண்டீகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து: உச்சநீதிமன்றம்

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்ட 8 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. இதன்மூலம், ஆம் ஆத்மியின் கவுன்சிலர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் சண்டீகர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார். மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்தது
தம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலம் வார்டு-38க்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டடம் அமைக்கும் பணிக்கு மேயர் வசந்தகுமாரி கமலக்ண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர் ச.ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம் வார்டு-70க்குட்பட்ட நூத்தஞ்சேரி குளத்தில் அம்ருத் 20 திட்டத்தின் கீழ் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் குளத்தினை மேம்படுத்தும் பணிகளுக்கு மேயர் வசந்தகுமாரி கமகைண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலக்குழு தலைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ், ச.ஜெயபிரதீப் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம், வார்டு-66க்குட்பட்ட ராஜாஜி சாலை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக நியாயவிலை கடை கட்டடம் அமைக்கும் பணிக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் மேயர் வசந்தகுமாரி கமகைண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ், ச.ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தேசிய போட்டியில் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரத்தில் வரவேற்பு

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்பு சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசியஅளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெற்ற இரட்டையர்களான எஸ்.பி.ரஞ்சன், எஸ்.பி.ரீகன் ஆகியோரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்ப அளிக்கப்பட்டது. பூச்செண்டுகளை கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் […]
பெருங்களத்தூர் குளம் ரூபாய் 1.40 கோடியில் சீரமைப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் மும்மத பிராத்தனையுடன் ஒருகோடி 40 லட்சம் செலவில் குளம் சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார். தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மங்கலேரி குளத்தை ஒருகோடி 40 லடசம் மதிபீட்டில் ஆழப்படுத்தி கரைகளுடன் 400 மீட்டர் நடைப்பாதை, சுற்றுசுவர், 20 பேர் அமரும் விதமாக இருக்கைகள், மரங்கள் நடுவு உள்ளி சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ், […]
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள திருவுருவ படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்பு சண்முகம் சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளின் போது சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணைமேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு

மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படும் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் வெளியூர் அழைத்து செல்லப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் வெளியூர் பயணத்தில் இணைந்துள்ளனர் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள்