பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.
குரோம்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாளில் பெண்களுக்கு இலவச புடவை

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாகரம் ஆகியோர் ஏற்பட்ட்டில் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவைகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர்தூவி மறியாதை […]
கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், மண்டலக்குழு தலைவர் எஸ்.இந்திரன் தலைமையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்

மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் உள்பட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார். இதில் மேயர் வசந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம் 5, 6, 7, 8, மற்றும் 11வது வார்டு பகுதிகளில்

புதியதாக சிறு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கபட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் 1வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அதிமுக வெளி நடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று கூடியது. இதில் துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், திமுக கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரா பானு […]
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில், 2024&2025 ஆம் நிதி ஆண்டிற்கான தாம்பரம் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர் ஆர்.ரமணி சமர்ப்பித்தார்

இக்கூட்டத்தில் துணைமேயர் கோ.காமராஜ், ஆணையாளர் ஆர். அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள், நிலை குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம் வெற்றி நகர், கன்னியம்மன் கோவில் குளத்தினை

அம்ரூத் 2022-23ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.68.80 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சியின் 2024-25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்தார்

மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம்

சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம். -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!