மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: ஆதரவு 454; எதிர்ப்பு 2

புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவானது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல்நாள் பழைய நாடாளுமன்றத்தில் அவை நடந்தது. அதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார். […]
மகளிர் இடஒதுக்கீடு மசோதா; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா அதிமுக 1991ல் ஆட்சியை பிடித்தபோது ஜெயலலிதாவுடன் 31 பெண்கள் எம்எல்ஏக்களாகினர் – எடப்பாடி மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான் என்பது பெருமை தற்போது இந்தியா முழுமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் – எடப்பாடி
மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு திமுக வரவேற்பு

மசோதா தொடர்பான அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும். மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா?-

வரும் 15ம் தேதி முதல், விண்ணப்பதாரர்களின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்களும் விண்ணப்பித்ததால் நிராகரிப்பு வீட்டில் 3600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரின் விண்ணங்களும் நிராகரிப்பு ₨.2.5 லட்சத்துக்கு அதிக வருமானம், அரசு வேலையில் உள்ளோரின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு…
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்!

பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்பு!
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி – 9ம்தேதி ஆலோசனை

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள், வருகிற 9ம்தேதி ஆலோசனை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை
தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் ஆய்வு

(29.08.2023) தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பம்மல் மண்டலம் அனகாபுத்தூர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும் கள ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மகளிர் உரிமை தொகை; 2 நாள் சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திட்ட செயலாக்கத்துறை செயலர் தினேஷ் அகமது, “மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ரூ.1,000 பெற… அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்

மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களில் தொடங்கலாம் என தாம்பரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மூ.மனோஜ் தெரிவித்துள்ளார். இதற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் கிடையாது. உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளர்கள், தபால்காரர் மூலம் மகளிர் உரிமைத்தொகையை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும்மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை,செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை,தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில்11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல்விபரங்களை அறியலாம்; http://tnwwhcl.in என்ற இணையதளத்தில்விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய […]