ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தள்ளுபடி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் […]

மதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு. எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்