கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை

ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. “அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை’ என்பது சொல்வழக்கு.ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் “அத்தப் பூக்கோலம்’ […]
வயநாடு விபத்து நூறு குடும்பங்களுக்கு வீடு வைக்க இடம் தருகிறார் கேரளா நகைக்கடை அதிபர் போபி

செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..
“பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி தொடர நடவடிக்கை”

கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடர நடவடிக்கை. வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யாரும் நேரில் வர வேண்டாம். இறந்தோரின் உடல்களை பெற குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே வந்தால்போதும் – கேரள முதல்வர் பினராயி விஜயன். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் தீவிரம் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் மீட்பு பணிகள் மேலும் ஒருவார காலம் நீடிக்கும் என அதிகாரிகள் தகவல்
அமித்ஷா குற்றச்சாட்டு – பினராயி விஜயன் மறுப்பு

அதிகனமழை பெய்யும் என 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் குற்றச்சாட்டு. வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்.
மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள்: பேர் சொல்லக்கூட ஊர் இல்லை

வயநாடு:சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை பகுதிகள், நிலச்சரிவு காரணமாக இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் நிறைந்த விரிசல் நிலமாக காணப்படுகிறது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர். வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை ஆகிய நகரங்கள் மக்கள் நடமாட்டம் காரணமாக கடைகள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளால் சூழ்ந்து காணப்பட்டது. உட்புற தோற்றம் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சூரமலா, சுற்றுலா பயணிகளின் […]
கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை

“கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது” “குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம்” “எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை” – மத்திய அமைச்சர் அமித்ஷா
கேரள சட்டப்பேரவையில் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
வயநாட்டில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு

வயநாட்டில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு கேரளா விரைவு