வெள்ளத்தில் மிதக்கும் வரதராஜபுரத்தில் 6 வீடுகளில் அறுபது பவுன் கொள்ளை

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ராஜிவ் நகரில் விஷ்ணு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என 17 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி தங்கள் தெரிந்தவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சரத்குமார் என்பவர் தன் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிச்சி அடைந்து உள்ள சென்று பார்த்த போதும் பீரோ உடைக்கப்பட்டு […]

ஆம்பூர் அருகே நகை திருடிய கல்லூரி மாணவன் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53). பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. […]

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

பிரணவ் ஜுவல்லரி 47 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன 100 சவரன் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் நகைக் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி […]

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

பண்ருட்டி அருகே சின்ன ஒடப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (61). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு பாச்சாரபாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் வாரண்டாவில் மறைத்து வைத்து இருந்த சாவி எடுத்து பிரோவில் இருந்த […]

அரும்பாக்கத்தில் 32 கிலோ நகை கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கைவரிசை

அரும்பாக்கத்தில் 32 கிலோ நகை கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகியோரை சென்னை அண்ணாநகர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேங்கை வாசலில் வீடு புகுந்து 75 பவுன் நகை கொள்ளை

வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு(56) பொறியாளரான இவர் அதே வேங்கைவாசலில் உள்ள டியானோ நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்கிறார். இவர் மனைவி சகுந்தலா ஆசிரியராகவும் மகள்கள் இரண்டுபேர் மாணவிகளாகவும் உள்ளனர். இன்று வழக்கம்போல் கதவை பூட்டி சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியபோது முன் கதவு கடபாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த இரண்டு பிரேக்களில் வைக்கப்பட்ட 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் […]