சென்னையில் வீடுகளின் விலை 20% உயர்வு

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘க்ரெடாய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, டில்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் கூலி வேலை செய்யும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதனை அறிந்த நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் மற்றும் பரிமளா சிட்டிபாபு அவர்கள் மற்றும் திரு.பா.பிரதாப் அவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திர்க்கு உடுப்புகள் மற்றும் பண உதவி அளித்ததுடன் மன தைரியம் கொடுத்தனர்.

திருச்சி திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட்டம். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் சீமான் கடும் எதிர்ப்பு

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அகற்றி வருகின்றனர். வீடுகளை இழந்து தவித்து வரும் பொதுமக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார். அபபோது பெண்கள் சிலர் காலில் விழுந்து கதறி அழுதனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர்,டோபி கானா தெரு,சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட […]

சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்வு

சென்னை:சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டண உயர்வு வருகிற 10-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.அதில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் 100 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஏழைகளை பாதிக்காத […]

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரின் உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

29.02.2024 வரை கால அவகாசத்தை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியீடு திட்டத்தில் இணைய வழி மட்டுமே மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு

கருணாநிதி நூற்றாண்டு விழா. 100 பேருக்கு வீடு

சென்னை ஆக, 10 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் வரும் மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

பெருங்களத்தூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வீடுகள்

பெருங்களத்தூரில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் நகர்ப்புற மேம்பாடு வாரிய குடியிப்புகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்பு. பெருங்களத்தூரில் 420 சதுர அடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 192 நகர்ப்புற மறுகுடியிப்பு விடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்தார். குடியிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர கூறினார். உதவி […]