அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.
“அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது”

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும்- நீதிபதிகள் கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை- ஓபிஎஸ் தரப்பு
மானநஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவரது கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்
பில்கிஸ் பானு வழக்கு சரணடைய அவகாசம் கோரிய 3 பேரின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் 11 பேரையும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 3 பேர் காலஅவகாசம் கோரி மனுத்தாக்கல்
பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது – உயர்நீதிமன்றம்.

பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் – உயர்நீதிமன்றம். போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?. இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது? போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் – உயர்நீதிமன்றம் பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பு – தமிழக அரசு பதில். ஓய்வூதியர்களுக்கு […]
தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு?: ஐகோர்ட் கேள்வி

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு ஒரு தணிக்கை அமைப்பு தானே?; இதில் என்ன தவறு என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக ஊடக தளங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறியும் வகையில் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்கு (நவ.28) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை! MRI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் நவ.28ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ‛‛ நீதித்துறையில் ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சந்திரசூட் கூறினார். தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில், தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது, 2002ல், அ.தி.மு.க., […]
ஆளுநர் ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக என 2 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது – உயர்நீதிமன்றம் “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் […]