தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ முன்னிலையில்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ குடியரசு நாள்‌ விழாவில்‌ கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உள்ளார்

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌. ரவி, முப்படைகளின்‌ உயர்‌ அலுவலர்கள்‌, தமிழ்நாடு காவல்துறை உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிமுகம்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உள்ளார்‌

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு!

உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கியதற்கு ஆளுநர் ஒப்புதல்

ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியம் அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு

உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜ.கண்ணப்பன்- முதல்வர் அறிவிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில், 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம்.

மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் பங்கேற்கவில்லை: கவர்னர் மாளிகை தகவல்

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகள் குறித்து சென்னை, ராஜ் பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது… இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் […]

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, அரசு அனுப்பிய மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை

ஆளுநர் விவகாரம் – தமிழக அரசு புதிய மனு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திருத்தம் கோரி மனு தாக்கல் பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனு