செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும்.
நீட் தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென வெளியான நிலையில், சில மாணவா்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது

அதேபோன்று, ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியான சூழலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 67 போ் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நிகழாண்டு நீட் தோ்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் போ் பங்கேற்றனா். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட் தோ்வைப் பொருத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். […]
சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை

தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் ஏற்கனவே உத்தரவு பள்ளி கல்வித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதால் குழப்பம் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை, பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் வேதனை சிறப்பு வகுப்புகள் தொடர்பாக, […]
மே 6ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்
40,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ : வீடுதேடி சென்று வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் […]
TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்-தமிழ்நாடு அரசு.