திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை
திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2026 தேர்தல் – தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்கேட்பு உடல்நலம் குணமடைந்து 3 வாரங்களுக்குப் பின் முதல்வர் சந்திப்பு
தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைத்து உள்ளார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தா
பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்
காவிரி வைகை தமிழ்நாடு நதி மீட்புக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது இது தொடர்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கீழடி பிரச்சனை வரி விதிப்பு / மாநிலங்களுக்கான நிதி பகிர்வு குறைவு/ கல்வி நிதி மறுப்பு உட்பட பல்வேறு பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில பாலியல் சார்கள் – எடப்பாட தாக்கு
திர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது […]
.அதிகாரிகளுக்கு ‘சீட்’ கொடுக்கும் திமுக?
2026-ல் IAS, IPS அதிகாரிகளுக்கு சீட் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்க்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது இருவர் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் திருவாரூரிலும் இன்னொருவர் சென்னையில் ஒரு தொகுதியிலும்களமிறங்குவார் என கூறப்படுகிறது.
திமுக எம்எல்ஏக்களில் பாதி பேருக்கு சீட் இல்லை
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தகுதியான வேட்பாளர்கள் என்ற அளவுகோல் எடுக்கப்பட்டிருப்பதால் இப்போது உள்ள எம்எல்ஏ-க்களில் பாதிப் பேருக்கு மேல் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை. சாதிய பின்னணி, பணபலம், நற்பெயர், தொகுதியில் தனித்த செல்வாக்கு உள்ளிட்ட தகுதிகளுடன் இம்முறை வேட்பாளர்களைத் தேடுகிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்சியில் முக்கிய பத வியில் இல்லாதவர்களுக்கும் கூட இம்முறை வாய்ப்புக் கிடைக்கலாம்” என் து கூறப்படுகிறது
அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து
செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்
சர்வதேச போதை கடத்தல் வழக்கு:திமுக நிர்வாகிகளுக்கு சம்மன்
திமுக அயலக அணியைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச போதை கடத்தல் வழக்கிலும், சர்வதேச போதை கடத்தல் பண பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும் திமுக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.

5 ஆம் தேதி மாலை நிலவர சேத/இழப்பு விபரங்களின்படி 28 பேர் உயிரிழப்பு. 95,980 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

“ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்”