ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு:-

விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு. நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானம் என நினைத்துவிட்டீர்களா என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு நீதிபதி சரமாரி கேள்வி.

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, ​​தெலங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை டிஜிபியுடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நடராஜ் மீது வழக்குப்பதிவு

இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நடராஜ் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக புகார். திமுக தொழில்நுட்ப பிரிவு அளித்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு.

உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்

எர்ணாகுளம் அருகே களமசேரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆணையிட்டுள்ளது.

காவலர்கள் நலன் காக்க Whatsapp குழு உருவாக்கி செயல்பட வேண்டும்… டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…

”Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும். அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், […]