முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கஞ்சா புழக்கம் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து மோசமாக பேசியதாக கூறி நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது இதில் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார். சிவி சண்முகத்தின் பேச்சின் விவகாரத்தை படித்து பார்த்த நீதிபதிகள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு மோசமாக பேச முடிகிறது […]
முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்க்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துவிட்டது. சம்பந்தப்பட்ட தாசில்தார், நிலத்தை தோட்டக்கலை துறைவசம் ஒப்படைத்துவிட்டார் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
குத்தகை பாக்கி ₹730 கோடி செலுத்தாததால், குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் ▪️ நிலம் இன்னும் ரேஸ் கிளப் வசம்தான் உள்ளது. ஆயிரம் பணியாளர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் – ரேஸ் கிளப் தரப்பு வழக்கறிஞர் வாதம் ▪️ குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளப்பில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது – அரசு சார்பில் வாதம் வழக்கில் வாதம் […]
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் குற்றபத்திரிகை நகல் பெற சென்னை சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளர்கள் ஒய்.பி.ஸ்ரிவன், சுஜாதா அக்டோபர் 8ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் ₹240 கோடி கடன் பெற்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, சென்னை தி.நகர் சரவண ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்களும் பங்குதாரர்களுமான ஒய்.பி.ஸ்ரிவன், பி.சுஜாதா ஆகியோருக்கு எதிராக சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல்
சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் மனு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறார் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி தவறு அல்ல; அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் தவறு’ எனக் கூறி வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகள் உரிமை அமைப்பு […]
உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை; நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் 10ஆக குறையும்
எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!

நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]
பச்சையப்பன் அறக்கட்டளை விவகாரத்தில்உயர்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு!!

கைகட்டி வேடிக்கைப் பார்க்காது என நீதிமன்றம் எச்சரிக்கை!!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியைதமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் […]
மதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு. எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது.