சிட்லபாக்கம் சிவி ராமன் தெருவில் ராயல் ஜாஸ்மின் குடியிருப்பில் வசிக்கும் சிறுவன் முத்துகிருஷ்ணன்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி வேடத்தில் தோன்றியதை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]
சிட்லபாக்கத்தில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இரண்டாவது பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன

இது அந்தப் பகுதியில் சாலையில் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ஜெகன் ஏற்கனவே பதவியில் இருந்த ஆணையரிடம் தெரிவித்திருந்தார். அதன் பெயரில் புதிய ஆணையர் எஸ்.பாலசந்தர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தை தூய்மைப்படுத்தி அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக பொதுமக்கள் சார்பில் மாமன்ற உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்தார்.
மாநில அளவிலான அட்டயாபட்டயா ( கிளித்தட்டு) சாம்பியன்ஷிப் போட்டி திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்றது

அப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அட்டையா பட்டையா கழகம் சார்பில் பயிற்சியாளர் பி.சுரேஷ் தலைமையில் இளையவர் பிரிவில் சிறுமியர் குழு பங்கேற்று 3வது இடத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஆகியோர் கோப்பையை வழங்கி வாழ்த்தி தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் ஆர்கேபுரம் சிவா, லக்ஷ்மணன், சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாநில அளவிலான அட்டயாபட்டயா (பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு) சாம்பியன்ஷிப் போட்டி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கியது

போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அட்டையா பட்டையா கழகம் சார்பில் பயிற்சியாளர் பி.சுரேஷ் தலைமையில் இளையவர் பிரிவில் இரண்டு குழுக்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு சீருடைகள் உமாபதி அன் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் வழங்கினார். இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தும் வகையில் தி.முகவை சேர்ந்த .விஜய பாரதி, ச.ராஜா, பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் தசரதன், மாறன், சென்னப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
சிட்லபாக்கம் பகுதியில் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது

பள்ளி முன்னேற்றத்திற்காகவும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் குழுவுக்கு உண்டான முக்கியத்துவத்தை குழு உறுப்பினர்கள் ஆகிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி துறை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கலந்துகொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்.
சிட்லபாக்கம் பகுதியில் மழைக்காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

மின் கம்பிகளில் உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகள் மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை 43வது வார்டு முழுவதும் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அகற்றி வருகின்றனர். இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.
தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டு எல்லைக்கு உட்பட்ட உ.வே.சாமிநாதன் தெருவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்
சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றின் காரணத்தினால் முத்துலட்சுமி நகர் காந்தி தெரு சந்திப்பில் உள்ள தேநீர் கடை அருகாமையில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேருடன் சாய்ந்ததை அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன்

விரைந்து வந்து சாலையை மறைத்துக் கொண்டிருந்த மரத்தினை அனைத்து துறை அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் அளித்து கொட்டும் மழையிலும் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த தகவலை தெரிந்த மற்ற கட்சி உறுப்பினர்களும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.