டெல்லியில் நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ள மாட்டார்;

சீன பிரதமர் லி கியாங் தலைமையில் சீனக்குழு பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரைபடம் வெளியிட்ட சீனா! தொடரும் அடாவடித்தனத்துக்கு இந்தியா கண்டனம்! –

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கில் பல சதுர கிலோ மீட்டர் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதிய வரைபடம் ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் […]

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியீடு. தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்ப்பு அண்மையில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீண்டும், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது சீனா

இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும் என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்

தென்னாப்ரிக்காவில் பிரதமர் மோடி- சீன அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எல்லைகளில் ரோந்து பணிகள் பதட்டமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவது குறித்து மோடி-ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.

அக். 25-ல் சீன உளவு கப்பல் கொழும்பு வருகை: இலங்கை – இந்தியா உறவில் பாதிப்பா?

ராமேசுவரம்: சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி […]

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் பலி

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கல்வான் மோதல்: சீன எல்லையில் 68,000 ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அந்த எல்லைப் பகுதிகளில் 68,000-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகக் குவிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவில் மழைக்கு 29 பேர் பலி; 16 பேர் மாயம்

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் டோக்சுரி புயலால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 10 நிலவரப்படி மழை வெள்ளத்தால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 16 பேரைத் தேடும் பணி நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் வீட்டை விட்டு வெளியேறிய 10 லட்சம் பேர்

கன மழை காரணமாக சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாகாணம் முழுவதும் தேங்கியிருக்கும் நீர் வடிவதற்கு 1 மாதம் வரை ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளதால், அதுவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அண்டை மாகாணங்களில் குடியேறியிருக்கின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் சீனாவில் இவ்வளவு மழை பதிவானதில்லை.

போர் ஒத்திகையை பாதியில் நிறுத்திய சீனா

சீனாவும் ரஷ்யாவும் இணைந்து கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ஒத்திகை தொடர்ந்தால், போர் சூழல் உருவாகும் எனக் கருதிய சீனா இந்த ஒத்திகையை பாதியில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்றும் சீன ராணுவம் குறிப்பிட்டுள்ளது.