முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிஐடி காலனியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ராஜாத்தி அம்மாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.
கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]
சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ‘‘ஒன்றிய பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றவர் பிரதமர் நரேந்திரமோடி. பாஜவினர் செல்போன் மூலம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.பிரதமர் மோடி கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தர மாட்டார். வரும் நாடாளுமன்ற […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (01.3.2024) அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி. அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தன் ஆகியோர் உள்ளனர்.