வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதமாக ₹21,000 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
வங்கி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை

சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர், பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வங்கிக்கு வந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? தவறான தகவல் என மறுப்பு

இந்த மாதம் வங்கிகளுக்கு இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக., 12 முதல், 15 வரையும், 25 முதல் 27ம் தேதிவரையும், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஆக., 12 இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இது, வழக்கமான விடுமுறை தான். 14ம் தேதி திங்கள்கிழமை வங்கி செயல்படும். ஆனால், […]
கடனை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை கூடாது: நிதியமைச்சர்

மக்களவையில், சிறிய அளவில் கடன் பெற்றவர்கள் அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகளை சில வங்கிகள் எடுப்பதாக புகார்கள் வருகின்றன. கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கிய HDFC வங்கி

ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்ட பிறகு, இந்த 2 நிறுவனங்களும் இணைந்து ஒரே பங்காக மாறியுள்ளது. இதனால், ஹெச்டிஎஃப்சி பங்குதாரர்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் 311 கோடிக்கும் அதிகமான புதிய பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது HDFC முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் HDFC வங்கியின் 42 பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களே உஷார்.. ஜூலை மாதத்தில் இந்த சனிக்கிழமை மட்டுமே வங்கி திறந்திருக்கும்!

வங்கி ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும். அதைப்பற்றி முழுமையாக காணலாம். ஜூலை மாதத்தில் மீதமுள்ள மூன்று சனிக்கிழமைகளில் ஒரு சனிக்கிழமை மட்டுமே வங்கிகளில் வேலை செய்யும். அலுவலகக் காரணங்களுக்காக சனிக்கிழமையன்று வங்கிப் பணியை முடித்துக் கொண்டால், அது விடுமுறை சனிக்கிழமை அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நாட்டில் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். ஜூலை மாதத்தில் ஒரு ஐந்தாவது சனிக்கிழமை அதாவது […]