தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, மதுரை மாவட்டம்‌, யா.கொடிக்குளம்‌ ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்‌ பள்ளியை தரம்‌ உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர்‌ 52 சென்ட்‌ நிலத்தினை தானமாக வழங்கிய உ.ஆயி அம்மாள்‌ என்கிற பூரணம்‌ தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின்‌ சிறப்பு விருதினை வழங்கி சிறப்பித்தார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உள்ளார்‌

தேசிய விளையாட்டு விருதுகள்

முகமது ஷமிக்கு (கிரிக்கெட்) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக அர்ஜுனா விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது..

24 மொழிகளில் சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி தேர்வு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு, கரக்பூர் ஐஐடி.யின் வாழ்நாள் சாதனையாளர் விருது

கேரளாவின் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக நாராயணன் பணியாற்றி வருகிறார்.

ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த பொங்கல் சிறப்பு பட்டிமன்ற விருது வழங்கும் விழாவில் தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சமுதாய முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவையாற்றிவருவதர்காக அப்துல் கலாம் விருது 2023 வழங்கப்பட்டது. திரைப்பட நடிகர் பாண்டியராஜன் விருதினை வழங்கினார்.

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய மந்திரி பதில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 102. உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் […]

தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் ஜனாதிபதி

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான “The Grand Cross of the Order of Honour” விருதை கிரீஸ் அதிபர் வழங்கினார்

“விருதை 140 கோடி இந்திய மக்கள் சார்பாக பெற்றுக்கொள்கிறேன், விருது வழங்கியதற்கு மக்கள் சார்பாக நன்றி”

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதல்வர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி முதலிடத்தையும், தாம்பரம் 2ம் இடத்தையும் பிடித்தது. நாளை (ஆக.15) சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, […]