“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிட்ட மற்றும் நடைமுறை படுத்தியவர்களையும் கைது செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர், அதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு” -சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு – திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரிடமும் கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சேலம் மாநகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று […]

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் வைத்து கைது செய்தது CBI

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.

ரூ.10 ஆயிரம் கோடி GST மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்!

போலி பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை நொய்டா போலீசார் கைது செய்தனர். போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் இ-வே பில்களை உருவாக்கி GST மோசடி செய்தது அம்பலம் டெல்லி, நொய்டா, காசியாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சிந்த்வாரா (எம்.பி) ஆகிய இடங்களை சேர்ந்த 45 பேர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா பிரபு (40) என்பவர் […]

திருட்டை தட்டி கேட்ட வியாபாரிக்கு பீர் பாட்டில் குத்து

வேளச்சேரியில் திருட்டை தடுத்ததால் வியாபாரியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, மேடவாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 54. இவர், வேளச்சேரி, விஜயநகர், சரவண ஸ்டோர் முன்புறம் பெல்ட், மணி பர்ஸ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரின் கடையில் இருந்து பொருட்கள் திருடு போனது. அதிலிருந்து இரவு நேரத்தில் கடையில்லேயே தங்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடையின் முகப்பில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் […]

மத்தியப் பிரதேச கோயிலுக்குள் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை வீச்சு: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது

ஜாவோரா: மத்தியப் பிரதேசத்தின் ரத்லம்மாவட்டத்தில் உள்ள கோயிலுக் குள் பசுவின் தலையை சிலர் வீசி சென்றனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசு இடத்தில் கட்டியிருந்த வீடுகளும் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பசுவதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆனாலும், அங்கு சிலர் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா என்ற இடத்தில் […]

போலி யுபிஐ செயலியை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்

டாக்சிகளில் பயணித்து விட்டு போலி செயலி மூலம் பணம் அனுப்பியது காண்பித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் அனுப்பியது போல் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் திருப்பதியைச் சேர்ந்த ரியாஸ் ரஃபீக்கை நுங்கம்பாக்கம் போலீஸ் கைது செய்தனர்.

துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர் காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது. சென்னை துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் கவிநாத் தலைமையிலான போலீசார் துரைப்பாக்கம் செக்ரடியேட் காலனி 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை […]

கிழக்கு தாம்பரம் வழிப்பறி கொள்ளையரை சிசிடிவி மூலம் பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க […]