கலை, அறிவியல் முதுநிலை படிப்புக்கு ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய வலைதளங்கள் வாயிலாக ஆகஸ்ட் 14 முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் ‘The Director, Directorate of collegiate education, chennai-15’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து […]

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி; விண்ணப்ப விநியோகம்

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதிக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி மாலை 5.30க்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்கவும்.

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாமிற்கு மு.க.ஸ்டாலின்‌ ஆய்வு

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (27.7.2023) தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, பூதலூர்‌ ஒன்றியம்‌, மனையேறிப்பட்டி ஊராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாமிற்கு நேரில்‌ சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, பொதுப்பணித்‌துறை அமைச்சர்‌ எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின்‌ தில்லி சிறப்புப்‌ பிரதிநிதி ஏ.கே.எஸ்‌.விஜயன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ டி.கே.ஜி. நீலமேகம்‌, துரை.சந்திரசேகரன்‌, […]

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாம்‌

தாம்பரம்‌ மாநகராட்சி, பெருங்களத்தூர்‌ மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர்‌ குருகுலம்‌ பள்ளியில்‌ நடைபெற்ற கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாமினை தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, (25.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: அரசு பள்ளி மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெற TNSED Schools என்ற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 🔹🔸இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். 🔹🔸விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை செயலியில் […]

என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு […]